Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 03 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்
திருகோணமலை – அலஸ்தோட்டப் பகுதியில், மசாஜ் நிலையமொன்றின் மீது, நேற்றிரவு (02) இனந்தெரியாத குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட மூவரை விடுவிக்கக் கோரி, இன்று காலை (03) அப்பகுதியைச் சேர்ந்தோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை - புல்மோட்டை பிரதான வீதியில், சுமார் 60க்கும் மேற்பட்டவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டமையால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
குறித்த மசாஜ் நிலையத்துக்குள் அனுமதியின்றி உள் நுழைந்து, அங்கிருந்த பொருட்களுக்குச் சேதம் விளைவித்த குற்றச்சாட்டில், அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதுக்கும் 42 வயதுக்கும் உட்பட்ட மூவர், அன்றிரவே, உப்புவெளிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
மசாஜ் நிலையம் என்ற பெயரில், அங்கு விபசார விடுதி நடத்தப்பட்டு வருவதாகவும், சமூக சீர்கேடுகள் இடம்பெற்று வருவதையும், அதைச் சகிக்க முடியாத சமூக தொண்டர்களே மசாஜ் நிலையத்தைத் தாக்கியதாக, போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
இதேவேளை, மேற்படி மசாஜ் நிலையம் அனுமதிப்பத்திரம் இல்லாமல் இயங்கி வந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும், திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago