2026 மார்ச் 19, வியாழக்கிழமை

மணல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

தீஷான் அஹமட்   / 2017 நவம்பர் 16 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ளைநாவல் காட்டுப் பகுதியில் மணல் அகழ்வு அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி, சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட மூவர், நேற்று (15) விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

குறித்த காட்டுப்பகுதியில் விசேட அதிரடிப்படையினர்  மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே, மேற்படி கைது இடம்பெற்றுள்ளது.

இவர்களிடமிருந்த மூன்று உழவு இயந்திரங்களையும் இதன்போது, கைப்பற்றப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மூவரும், உழவு இயந்திரங்களுடன் மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான மூன்று சாரதிகளும், மூதூர் பொலிஸில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், மூதூர் நீதிமன்றத்தில் இவர்களை ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .