2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

மணல் அகழ்வு பாதிப்புகள் குறித்து எம்.பிக்கள் கள ஆராய்வு

Princiya Dixci   / 2021 ஜூலை 25 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாதன்ஓடையில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான கள நிலைமைகளை ஆராய்வதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர், இன்று (25) காலை அப்பகுதிக்குச் சென்றிருந்தனர்.

இதன்போது, வெருகல் பகுதியிலுள்ள விவசாய சங்கங்கள், சமூக அமைப்புக்கள், வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

அவர்கள், மணல் அகழ்வினால் வெருகல் பகுதியில் ஏற்படப்போகும் பாதிப்புக்கள் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெளிவுபடுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X