2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மணல் ஏற்றிய நால்வர் கைது

Editorial   / 2017 நவம்பர் 12 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம், ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பாலத்துக்குக் கீழ் நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றிய நால்வர், நேற்று (11) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனரென, திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர்கள் வருகை தந்த 4 உழவு இயந்திரங்களுடன் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளனர்.

கிண்ணியா, காக்காமுனை, இடிமன், மஹ்ரூப் நகர் மற்றும் மஹமாறு போன்ற கிராமங்களைச் சேர்ந்த 25 - 30வயதுக்கு உட்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

உழவு இயந்திரங்களுடன், கைதுசெய்யப்பட்ட நான்கு பேரையும் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் சந்தேகநபர்களை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X