2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மதுபோதையில் இருந்தவர்களுக்கு பிணை

Niroshini   / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை நகரில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றில் மதுபோதையில் கைது செய்யப்பட்ட 12 நபர்களையும் ஒரு இலட்சம் ரூபாய் வீதம் சரீர பிணையில் செல்லுமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் டி.சரவணராஜா, இன்று (31) உத்தரவிட்டார்.

மேலும், பிணையில் விடுவிக்கப்பட்ட 12 பேரையும் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி நீதிமன்றத்துக்கு சமூகமளிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

திருகோணமலை நகரை அண்மித்த விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வின்போது மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை, களியாட்ட நிகழ்வினை பார்வையிட சென்றிருந்த இரண்டு பேர் தாக்குதலுக்குள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், தாக்குதல் நடத்திய சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .