Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2017 நவம்பர் 11 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்,ஒலுமுதீன் கியாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம்
மதிலொன்று இடிந்து விழுந்ததால் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று, திருகோணமலை கந்தளாய் பகுதியில் நேற்று (10) இடம்பெற்றுள்ளதென கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர், கிண்ணியா வில்வெளிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹபீபுல்லா (32 வயது) என்ற குடும்பஸ்தராவர்.
குடிநீர் குழாய் திருத்தப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, அருகிலிருந்த மதில் இடிந்து விழுந்ததால் இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது.
சடலம், பிரேத பரிசோதனைக்காக கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .