2025 மே 05, திங்கட்கிழமை

மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது

Princiya Dixci   / 2021 ஜூன் 03 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

நாட்டில் மதுபான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், திருகோணமலை, மொரவெவ  பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை விற்பனை செய்த நபரொருவரை, நேற்றிரவு (02) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மொரவெவ பிரதேசத்தில் இளைஞரொருவர் சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக  பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, அங்கு விரைந்த மொரவெவ பொலிஸார்,  பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய அவ்விளைஞனைக் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரை பொலிஸ் பிணையில் விடுத்துள்ளதாகவும் எதிர்வரும் 22ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றத்துக்கு வருகை தருமாறும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X