2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

மனைவி மீதுள்ள கோபத்தினால் மச்சானுக்கு கத்திக்குத்து

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 10 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைநகர் பகுதியில் 50 வயதுடைய நபரொருவர், கத்திக்குத்துக்கு இலக்காகிப்  படுகாயமடைந்த நிலையில் தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மூதூர் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைச் தகவல்கள் தெரிவித்தன.

கத்திக்குத்துக்குள்ளானவரின் சகோதரியில் கணவரே, நேற்று வெள்ளிக்கிழமை (09) மாலை 6 மணியளவில், இவரைக் கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச்சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

தப்பியோடியவர், கத்திக்குத்து தாக்குதலுக்குள்ளானவரின் சகோதரியை திருமணம் செய்து பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கணவன் - மனைவிக்கிடையில் இடம்பெற்ற பிரச்சினையைப் பேசுவதற்காக வேண்டி குறித்த பெண் தனது சகோதரனை அழைத்து அல்லைநகர் பகுதியிலுள்ள வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இதன்போது, மனைவியின் மீது கொண்ட பகை காரணமாகக் கணவன், மச்சானைக் கத்தியால் குத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற மூதூர் பொலிஸார், தப்பியோடிய நபரைத் தேடி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .