2025 மே 19, திங்கட்கிழமை

மனைவியைத் தாக்கியவருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா, எப்.முபாரக்

திருகோணமலை, புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், சாராயம் குடித்து விட்டு மனைவியைத் தாக்கிக் காயப்படுத்தியமை மற்றும் கஞ்சா வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை, எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட திருகோணமலை நீதிமன்ற நீதவான் விஷ்வானந்த பெர்ணான்டோ, அவருக்குத் தண்டப்பணமும் விதித்தார்.

380 மில்லி கிராம் கேரளா கஞ்சா வைத்திருந்தமைக்காக, அவருக்கு 4,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

புல்மோட்டை 04ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த எம்.எஸ்.எம்.இக்பால் (39 வயது) என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் சாராயம் குடித்து விட்டு, வீட்டுக்குச் சென்று மனைவியைத் தாக்கிக் காயப்படுத்தியதாகத் தமக்குக் கிடைத்த முறைப்பாட்டுக்கமையவே, அவரை, திங்கட்கிழமை (08) கைதுசெய்ததாகத் புல்மோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.

அவரை, நீதிமன்றத்தில், செவ்வாய்க்கிழமை (09) ஆஜர்படுத்திய போதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X