Niroshini / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை,கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிவுலக்கட பகுதியில் சட்ட விரோதமான முறையில் மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற பிக்கு ஒருவர் உட்பட ஐந்து கடற்படை வீரர்களை நேற்று புதன்கிழமை மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சட்ட விரோதமான முறையில் கடற்படைக்கு சொந்தமான டிப்பரில் கிவுலக்கட பௌத்த விகாரையிலிருந்து திரியாய் வலகம்பா கடற்படை முகாமுக்கு மரக்குற்றிகளை கொண்டு செல்ல முற்பட்டபோது பொதுமக்கள் வழங்கிய இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த நபர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து டிப்பர் வாகனத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த பௌத்த பிக்கு கிவுலக்கட விகாரையில் கடமையாற்றுபவர் எனவும் ஐந்து கடற்படையினரும் திரியாய் பகுதியில் கடமையாற்றுபவர்கள் எனவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026