2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

மரக்கறிச் செய்கையாளர்கள் பாதிப்பு

Editorial   / 2021 டிசெம்பர் 19 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சோலை வெட்டுவான் மற்றும் கதிரடப்பஞ்சேனை முதலான பகுதிகளைச் சேர்ந்த மரக்கறி செய்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இப்பிரதேசங்களில் சுமார் 25க்கும் மேற்பட்ட மரக்கறிச் செய்கையாள்கள் 40 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் செய்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

எனினும், இம்முறை செய்கை பண்ணப்பட்ட மரக்கறிகள், போதியளவு உரம் இல்லாததனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இம்முறை சேதனப் பசளை பயனியளிக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பயிர்கள் வளர்ச்சி அடையாமை, மஞ்சள் நிறமாகக் காணப்படுகின்றமை மற்றும் காய்கள் காய்க்காமை என தாம் பெரும் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, தமக்கான நட்டஈட்டை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுனெ மரக்கறிச் செய்கையாளர்கள் கோருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X