2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

மரம் வெட்டும் இயந்திரங்களைத் திருடிய இருவருக்கு விளக்கமறியல்

Niroshini   / 2016 ஜூன் 20 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எப்.முபாரக்

மரம் வெட்டும் இயந்திரம் மூன்றைத் திருடிய இருவரை எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதி எல்.ஜி.பெர்னான்டோ, இன்று திங்கட்கிழமை (20) உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை, நிலவெளியில் மரம் வெட்டும் ஆலையொன்றில் இவ்விருவரும் பணியாற்றி வந்துள்ளனர். ஆலையின் உரிமையாளருடன் சம்பளம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக, இவ்விருவமாகச் சேர்ந்து குறித்த ஆலையில் உள்ள மூன்று இயந்திரங்களைத் திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேகநபர்கள் இருவரும், மகாவெல, மாத்தளையைச் சேர்ந்த 31,19 வயதுடையவர்கள் எனவும், இருவரையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .