2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

மறைந்த உறுப்பினரின் பெயரில் வீதி

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 29 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்

சோனகவாடி வட்டாரத்தில் உள்ள வீதிக்கு, திருகோணமலை நகராட்சி மன்றத்தின் உறுப்பினராக இருந்து மறைந்த  அமரர் ச.சனூனின் பெயரை சூட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருகோணமலை நகராட்சி மன்றத்தின் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினராக சோனகவாடி வட்டாரத்துக்கு தெரிவாகி செயற்பட்டு வந்த ஜனாப் சனூன், கொவிட் தொற்றுக் காரணமாக மரணமடைந்தார்.

திருகோணமலை நகராட்சி மன்றத்தின் 42ஆவது சபைக் கூட்டம், தலைவர் நா.இராஜநாயகம் தலைமையில் நேற்று (28) இடம்பெற்ற போது, அன்னாருக்காக அஞ்சலி செலுத்தியதுடன், அவருக்கான இரங்கல் உரைகளும் உறுப்பினர்களால் நிகழ்த்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற தலைவரின் உரையின் போது, தலைவரின் பிரேரனையாக அவருடைய வட்டாரத்தில் உள்ள வீதி ஒன்றுக்கு பதவியில் இருக்கும் போது உயிரிழந்த அமரர். ச. சனூனின் பெயரை சூட்டுவது என சபையால் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X