2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

மற்றுமொரு கோர விபத்தில் 8 பேர் படுகாயம்

Freelancer   / 2024 ஜனவரி 27 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ . அச்சுதன் 

திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தங்கநகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 நபர்கள் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில்  நேற்று (26) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவிசாலையிலிருந்து திருகோணமலைக்கு வேனில் சுற்றுலா வந்தவர்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு திரும்பிச் சென்று வேளை, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் ரக லொறியின் பின்னால்   மோதுண்டதில் இவ்விபத்துச் சம்பவம் நேர்ந்துள்ளது.

இதன்போது வேனில் பயணித்த அவிசாவளையைச் சேர்ந்த வேன் சாரதி உற்பட 07 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் ரக லொறியின் உதவியாளர் ஒருவரும் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X