Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 செப்டெம்பர் 15 , பி.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாராஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையின் மலசலக் கூடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட கைக்குண்டு தொடர்பில், திருகோணமலை – உப்புவெளி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
வைத்தியசாலை வளாகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.ரி.வி கமெராக்களின் காட்சிகளை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலை அடுத்தே இவ்விளைஞனை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்தக் கைக்குண்டின் பாதுகாப்பு ஆணி கழற்றப்பட்டுள்ளது. ஆணிக்குப் பதிலாக நுளம்பு சுருளொன்றை இணைத்து, வெடிக்கும் வகையில் இருந்துள்ளது என ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞன், வைத்தியசாலைக்கு அருகாமையில் நிர்மாணிக்கும் கட்டிட நிர்மாணப் பணிகளுக்காக இரண்டொரு வாரங்களுக்கு முன்னரே வருகைதந்துள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவ்விளைஞன், மேலதிக விசாரணைகளுக்காக குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அந்த கைக்குண்டு முதலாம் மாடியின் மலசலக்கூடத்திலிருந்து அண்மையில் மீட்கப்பட்டது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நீர்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ, மற்றும் விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரணவும் அந்த வைத்தியசாலையிலேயே சிசிக்சைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
46 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago