2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மஹரகமவுக்கு பஸ் சேவை ஆரம்பம்

Princiya Dixci   / 2021 நவம்பர் 02 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் ஆதரவற்ற நோயாளர்களுக்காக கந்தளாய் பஸ் சாலையினால் மஹரகம நம்பிக்கை வைத்தியசாலைக்கு தினமும் செல்வதற்காக  புதிய பஸ் சேவையொன்று, உத்தியோகபூர்வமாக இன்று (02) ஆரம்பிபித்து வைக்கப்பட்டது.

இச்சேவை, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான கபில அத்துக்கோரளவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த பஸ் சேவையானது, தினமும் நண்பகல் 12 மணிக்கு திருகோணமலை லங்கா பட்டினத்திலிருந்து சேருவில, கந்தளாய்   ஊடாக கொழும்பு மஹரகமவுக்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X