Princiya Dixci / 2021 பெப்ரவரி 11 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம் கீத்
திருகோணமலை மாகாணக் கல்வித் திணைக்கள நிர்வாகப் பிரிவு ஊழியர் ஒருவருக்கு, திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்று (10) எடுக்கப்பட்ட அன்டிஐன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவருடன் தொடர்பைப் பேணிய சுமார் 50 பேருக்கு, நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்று (11) மேற்கொள்ளப்பட்ட அன்டிஐன் பரிசோதனையில், மாகாணக் கல்வித் திணைக்கள நிர்வாகப் பிரிவு ஊழியர்கள் 07 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
அத்துடன், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மூவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, மேற்படி தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தொற்றாளர்கள் அனைவரையும் மட்டகளப்பு - பெரிய கல்லாறு கொரோனா மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
9 hours ago
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
16 Nov 2025
16 Nov 2025