2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மாகாண கல்விப் பணிப்பாளர் தொடர்பிலான இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு

அப்துல்சலாம் யாசீம்   / 2019 மார்ச் 19 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.டி.எம்.நிஸாம் என்பவருக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு, மீண்டும் ஏப்ரல் 03ஆம் திகதி  வரை  நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு, திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில், இன்று (19) அழைக்கப்பட்ட போது, இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.சீ.சபருள்ளா  என்பவருக்கு விடுக்கப்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் பற்றி,  நீதிபதி இரு தரப்பினருக்கும் விளங்கப்படுத்தியதுடன், இவ்வாறான அச்சுறுத்தல்களைத் தவிர்த்து, தத்தமது வழக்குகளைக் கொண்டு நடத்துமாறு அறிவுறுத்தினார்.

இதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நடத்தப்பட்ட ஹர்த்தாலுக்கு, திருகோணமலை சட்டதரணிகள் சங்கமும் ஆதரவு வழங்கியிருந்தமையால், இவ்வழக்கின் மனுதாரர் எம்.கே.எம்.மன்சூர் சார்பில் சட்டத்தரணி ஆஜராகவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .