Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 07 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஆர்.எம்.றிபாஸ்
மாகாணக் கல்விப் பணிப்பாளராக, கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் கடமையாற்றி வந்த எம்.டி.ஏ.நிஸாமுக்கு, இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மேல் நீதிமன்றத்தில், ஆணை விண்ணப்பமொன்றை செய்த போது, நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன், நேற்று முன்தினம் (05) இக்கட்டளையை பிறப்பித்துள்ளார்.
2018 செப்டெம்பர் 31ஆம் திகதி, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரோஹித போகொல்லாகமவால் கிழக்கு மாகாணத்தின் மாகாணக் கல்விக் பணிப்பாளராக எம்.கே.எம்.மன்சூர் நியமிக்கப்பட்டார்.
இதேவேளை, கிழக்கு மாகாண புதிய ஆளுநராகக் கடமையேற்ற எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லாஹ் 2019 ஜனவரி 31ஆம் திகதி கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பதவியிலிருந்து எம்.கே.எம்.மன்சூரை, எவ்விதமான காரணங்களும் இன்றிப் பதவியிலிருந்து நீக்கி, மேற்படி எம்.டி.ஏ.நிஸாமை நியமித்துள்ளார்.
இந்நியமனத்துக்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றில், மனுதாரரான எம்.கே.எம்.மன்சூர் வழக்குத் தாக்கல் செய்தார்.
மனுதாரர் சார்பில் சட்டத்தரணி எம்.சீ.சபருள்ளா ஊடாக திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் ஆணை விண்ணப்பம் செய்யப்பட்டது.
இதில் மனுதாரர் சார்பில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லாஹ், மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் எம்.வை்.சலீம், கிழக்கு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் ஜ.கே.ஜீ.முத்துபண்டா, கிழக்கு மாகாணக் கல்வியமைச்சின் மாகாணப் பணிப்பாளர் எம்.டி.ஏ.நிஸாம், சட்டமா அதிபர் போன்றோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவ்வழக்கு, நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வந்த எம்.டி.ஏ.நிஸாமை, 5ஆம் திகதியிலிருந்து (நேற்று முன்தினம்) மாகாணக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றக்கூடாதென, நீதிபதி கட்டளையிட்டுள்ளார்.
6 hours ago
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
16 Aug 2025
16 Aug 2025