2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மாடுகள் இறப்பில் அரசாங்கம் அலட்சியம்

எப். முபாரக்   / 2019 ஜனவரி 10 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் தொடர்ந்தும் மாடுகள் இறந்துவரும் நிலையிலும், இது விடயமாக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் அரசாங்கம் அலட்சியமாக உள்ளதாக, பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்தோடு, கந்தளாய் பிரதேச செயலகத்திலும், மிருக வைத்தியர்களிடம் முறைப்பாடு செய்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையெனவும் நேரில் வந்து பார்த்தது கூட இல்லையெனவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

மேய்ச்சல் நிலப் பற்றாக்குறையாலு ஒருவித நோய் காரணமாகவும் இப்பிரதேசத்தில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட மாடுகள் இறந்திருப்பதாகத் தெரிவிக்கும் பண்ணையாளர்கள், உரிய அதிகாரிகளை நடவடிக்கை எடுத்துத் தீர்த்து வைக்குமாறும் கோருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X