2025 மே 05, திங்கட்கிழமை

மின் துண்டிப்பால் மக்கள் அவதி

Editorial   / 2018 ஒக்டோபர் 21 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியாவின் சில இடங்களில், முன்னறிவித்தலின்றி அடிக்கடி மின் துண்டிப்பு செய்யப்படுவதால், மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

பல மணித்தியாலக் கணக்கில் மின்சாரம் துண்டிப்புச் செய்யப்படுகின்றமையால், அரச திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றிலுள்ள அன்றாட நடவடிக்கைகளும் பாதிப்படைகின்றன.

இதேவேளை, இன்று (21) காலை 09.30 மணியளவில் செய்யப்பட்ட முன்னறிவித்தலற்ற மின்துண்டிப்பு, சுமார் நான்கு மணித்தியாலங்களைக் கடந்தும் நீடித்திருந்ததென மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பலமுறை அறிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமை குறித்து, மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X