2025 மே 01, வியாழக்கிழமை

மின்னல் தாக்கியதில் நபரொருவர் உயிரிழப்பு

Janu   / 2023 மே 30 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

மின்னல் தாக்கியதில் கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கந்தளாய் வைத்தியசாலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் திங்கட்கிழமை (29) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  உயிரிழந்தவரின் சடலம் தற்போது கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் அக்போபுர-படுகச்சிய பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையை  முகம்மது லத்தீப் முஹம்மது மபாஸ் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் அக்போபுர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .