2025 மே 02, வெள்ளிக்கிழமை

மீண்டும் கொரோனா; கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு

Princiya Dixci   / 2021 மார்ச் 29 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ், எப்.முபாரக்  

திருகோணமலை, கிண்ணியாவில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர்கள் மூவருக்கு கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அப்பாடசாலைக்கு இன்று (29) வருகை தந்த  மாணவர்கள் மீண்டும் வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர்.

இதன்காரணமாக பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு, இம்மாதம் ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, இப்பாடசாலையின் மூன்று ஆசிரியர்கள், பிசிஆர் பரிசோதனையின் மூலம் கொரோனா தொற்றாளர்களாக நேற்று இனங்காணப்பட்டனர்.

எனினும், முன்னதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மாணவி, சிகிச்சை பெற்று குணமடைந்து, வீடு திரும்பியுள்ளார்.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இம்மாவட்டத்தின் அனைத்துப் பிரதேசங்களிலும் முகக்கவசங்களை அணியுமாறு, இராணுவத்தினரால் இன்றைய தினம் (29) 
தெளிவுபடுத்தப்பட்டு வருகின்றன.

இம்மாவட்டத்தின் கந்தளாய், மூதூர், சேருவில, வெருகல் மற்றும் திருகோணமலை நகரம் போன்ற அனைத்துப் பகுதிகளிலும் இராணுவத்தினரால் முகக்கவசங்களின் முக்கியத்துவம் தொடர்பாக குழுமியிருக்கும், முகக்கவசமின்றி வீதியால் செல்லும்  மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தி வருகின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தில் அண்மையில் 40 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X