Princiya Dixci / 2021 மே 25 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, திருக்கடலூர் பகுதியில் இருந்து கடலுக்கு ஞாயிற்றுக்கிழமை (23) படகில் சென்ற மீனவர்கள் மூவர் கரை திரும்பவில்லையென திருக்கடலூர் விபுலானந்தா கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் தங்கவேலாயுதம் கமல் தெரிவித்தார்.
திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த சஞ்சீவன் (வயது 21), ஜீவரெட்ணம் சரன்ராஜ் (வயது 34) மற்றும் சிவசுப்ரமணியம் நதுசன் (வயது 21) எனும் மீனவர்களே காணாமல் போயுள்ளனர்.
இம்மீனவர்களைத் தேடும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் இவர்கள் சென்ற படகுகளைத் தேடுவதற்காக 10க்கும் மேற்பட்ட படகுகளை அனுப்பி வைத்துள்ளதாகவும் திருக்கடலூர் விபுலானந்தா கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், கடற்படையினருக்கும், மீன்பிடித் திணைக்களத்துக்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
9 hours ago
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026