2024 மே 02, வியாழக்கிழமை

மீன்களின் விலை அதிகரித்துள்ளதாக சில்லறை வியாபாரிகள் தெரிவிப்பு

Freelancer   / 2023 ஜூலை 26 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை மீன் பொதுச் சந்தையில் மீன்களின் விலை அதிகரித்துள்ளதாக சில்லறை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் வெளி மாவட்டங்களில் இருந்து கடற்றொழில் நடவடிக்கைக்காக வருபவர்கள் டைனமைட், சுருக்குவலை போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதினால் வலைகளில் மீன்கள் குறைவாகவே பிடிபடுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறான சூழலில் திருகோணமலை மீன் பொதுச் சந்தையில் திருக்கை மீன் ஒரு கிலோகிராம் 800 ரூபாய்க்கும், நெத்தலி 1500 ரூபாய்க்கும், கணவாய் 1100 ரூபாய்க்கும், இறால் 1200 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகின்றது.

அத்துடன் மொத்த வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பதனால் சில்லறை வியாபாரிகள் கிராமங்களுக்கு சென்று இன்னும் மேலதிக விலைக்கு விற்க வேண்டிள்ளதாகவும், சில்லறை வியாபாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .