2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மீன்பிடிக்கச் சென்ற இளைஞனை காணவில்லை

Editorial   / 2018 நவம்பர் 10 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஆர்.எம்.றிபாஸ், அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியா, பாலத்தில் இருந்து தூண்டிலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் இன்று (10) பிற்பகல் 3 மணியளவில் தவறிவிழுந்து கடலில் மூ​ழ்கிய நிலையில் காணாமல்போயுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காணாமல்போயுள்ள இளைஞன், கிண்ணியா - 3, பிரதான வீதியை சேர்ந்த யாக்கூப் ஹாரி முஹீத் (18 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, தனது சக நண்பர்களுடன் விடுமுறை தினமான இன்று தூண்டிலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, தவறுதலாக விழுந்து கடலில் மூழ்கிய நிலையில், இளைஞன் காணாமல்போயுள்ளார் என, ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

குறித்த இளைஞரை, தேடும் பணியில் பிரதேச மக்களும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X