Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஜூன் 15 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியில் உள்ள வீடொன்றின் காணியொன்றில் விடுதலை புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக கூறி பெக்கோ இயந்திரம் மூலம் அகழ்வுப்பணி மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் முன்னிலையில் சனிக்கிழமை(14) காலை முன்னெடுக்கப்பட்டது.
ஈச்சிலம்பற்று பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மூதூர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் குறித்த அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்ட நிலையில் அகழ்வு இடம்பெற்ற இடத்திலிருந்து எந்தவித தடைய பொருட்களும் மீட்கப்படவில்லை.
இதையடுத்து மூதூர் நீதிமன்ற நீதிபதி அகழ்வினை இடைநிறுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவு வழங்கியதையடுத்து சுமார் ஒரு மணி நேரம் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணி இடைநிறுத்தப்பட்டது.
குறித்த இடத்திற்கு விசேட அதிரடிப்படையினர், தடையில் பிரிவு பொலிஸார், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அபு அலா
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago