2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

முதலை கடிக்கு உள்ளான மீனவர் வைத்தியசாலையில்

எப். முபாரக்   / 2019 ஜனவரி 04 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தளாய் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற தீவரகம பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சோமரத்தின பண்டார என்ற மீனவர், முதலைக் கடிக்கு உள்ளான நிலையில் பலத்த காயத்துடன், கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம், நேற்று (03) இடம்பெற்றுள்ளது.

இரு மீனவர்கள், ஒரு தோணியில் சென்று மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, வலை குளத்தின் கட்டையொன்றியில் சிக்கியுள்ளது. அதனை எடுப்பதற்காக மேற்படி மீனவர், குளத்தில் இறங்கிய வேளை, முதலை காலைக் கடித்து இழுத்துள்ளதோடு, மற்ற மீனவரின் உதவியுடன் மீண்டு கரைக்கு வந்து சேர்ந்ததாக குறித்த மீனவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X