2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

முதலைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை

எப். முபாரக்   / 2018 டிசெம்பர் 17 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் கரையோரப் பிரதேசங்களிலுள்ள இடிமண், இப்றாகிம் துறை, இறால்குழி ஆகிய ஆறுகளிலுள்ள பெருமளவிலான முதலைகள், மழை வெள்ளப் பெருக்கையடுத்து, கரையோர வயல் நிலங்களிலும் ஆற்றங்கரைகளிலும் உலாவுவதால், நன்னீர் மீன்பிடியாளர்களும் கரையோரங்களில் குடியிருக்கும் குடும்பங்களும் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

இதேவேளை, இப்றாகிம் துறை ஆற்றில் தொழில்களை மேற்கொள்ளச் சென்ற 9 பேர், அண்மைக் காலங்களில் பலத்த முதலைக் கடிக்கு உள்ளாகி பெரும் ஆபத்துகளையும் எதிர்நோக்கினர்.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி, முதலைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வழி வகைகளை மேற்கொள்ளுமாறு, பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X