Editorial / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல் சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம், எஸ்.எம்.றனீஸ், ஒலுமுதீன் கியாஸ், பொன் ஆனந்தம், எ.எம்.கீத்
திருகோணமலை மாவட்டத்தில், சமுர்த்தி பயனாளி குடும்பங்களுக்கு, அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற சஹனபியவர, அருனலு ஆகிய வட்டியில்லா கடன் திட்டத்தின் கீழ், முதலாம் கட்டமாக 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டு வருவதாக, மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.
இதற்கமைவாக, இம்மாதம் முதலாம் திகதி வரை, சஹன பியவர கடன் திட்டத்தின் கீழ் 31,380 விண்ணப்பப்படிவங்கள் கிடைத்தன என்றும் அவற்றுள் 12,697 பயனாளிகளுக்கு 63,485,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அருனலு திட்டத்தின் கீழ், 1,365 விண்ணப்பப்படிவங்கள் கிடைத்தன என்றும் அவற்றுள் 859 பயனாளிகளுக்கு 4,295,000 ரூபாயுமாக மொத்தம் 13,556 பயனாளிகளுக்கு 67,780,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஏனைய பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
9 hours ago
17 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
17 Nov 2025