2026 மார்ச் 19, வியாழக்கிழமை

முதிரை மரக்குற்றிகளை கொண்டு சென்றவர் கைது

எப். முபாரக்   / 2017 நவம்பர் 08 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி ஐந்து முதிரை மரக்குற்றிகளை கொண்டு சென்ற நபரொருவர், நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளாரென, கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

 

கந்தளாய், வட்டுக்கச்சி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளாரெனவும் பொலிஸர் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர், கந்தளாயில் இருந்து வட்டுக்கச்சி பிரதேசத்துக்கு முச்சக்கரவண்டியொன்றில் முதிரை மரக்குற்றிகளை கொண்டுசென்ற போதே, போக்குவரத்து பொலிஸாரால் சோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரைத் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் பயன்படுத்தி முச்சக்கர வண்டியும், கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .