Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஜூன் 17 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் மத்திய கல்லூரியில் நிலவும் கட்டிடத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து தருமாறும்,புதிய கட்டிடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடுவித்து வேலைகளை ஆரம்பிக்குமாறும் வலியுறுத்தி பாடசாலைக்கு முன்பாக அமைதிவழி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் திங்கட்கிழமை (16) முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
மூதூர் மத்திய கல்லூரியில் காணப்படும் ஒரு கட்டிடம் கடந்த வாரம் இடிந்து விழுந்துள்ளது.இன்னும் இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் காணப்படுகிறது.இதன் காரணமாக 14 வகுப்பு மாணவர்கள் மர நிழலில் இருந்து கல்வி கற்று வருகின்றனர்.
இந்நிலையில் முந்தைய அரசாங்கத்தால் மூதூர் மத்திய கல்லூரி புதிய கட்டிடத்திற்காக 120 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போதைய அரசாங்கத்தால் இவ் வேலைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு இவ் அரசாங்கம் புதிய கட்டிடத்திற்கான வேலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.
அத்தோடு கவனயீர்ப்பு நிறைவடைந்த பின்னர் அவ்விடத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன , மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் வருகை தந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோரை சந்தித்து கலந்துரையாடிய தோடு கட்டிட நிலைமைகளையும் பார்வையிட்டார்.அத்தோடு மூதூர் வலயக் கல்வி அலுவலக தொழில்நுட்ப அதிகாரிகளும் இவர்களோடு பிரசன்னமாகியிருந்தனர்.
அத்தோடு பாராளுமன்ற உறுப்பினரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டிருந்தது.
இதன் பின்னர் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
“கடந்த அரசாங்கம் ஆனது மூதூர் மத்திய கல்லூரிக்கு கட்டிடம் வழங்குவதாக கூறி ஏமாற்று வேலை செய்துள்ளது.முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரோடு இது தொடர்பாக பேசினேன்.
கடந்த அரசாங்கத்தால் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கடிதம் மாத்திரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதே தவிர நிதி ஒதுக்கப்படவில்லை.இதே போன்ற பல சம்பவங்கள் பதிவாகியிருக்கிறது.நாளை பாராளுமன்றம் கூட உள்ள நிலையில் இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுவேன்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஏ.எச் ஹஸ்பர்
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago