2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மூதூரில் குண்டு வெடிப்பு

Editorial   / 2021 டிசெம்பர் 12 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தோப்பூர் அல்லேநகர் பிரதேசத்தில்  குண்டொன்று வெடித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த 15 வயதான சிறுவன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமடைந்தார்.

இன்று (12) பிற்பகல் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தங்களது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இலை,குழை வெட்டுவதற்காக, அருகிலிருக்கும் பாலடைந்த இடத்துக்குச் சென்றுள்ளான்.

அங்கு, மரமொன்றின் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்த போதே, குண்டு போன்ற ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், கடுமையான காயமடைந்த சிறுவன், தோப்பூர் வைத்தியசாலயில் அனுமதிக்கும் போது மரணமடைந்துவிட்டார் என்றும், அவருடைய சடலம் அந்த வைத்தியசாலையின் சவச்சாலையிலேயே வைக்கப்பட்டுள்ளது என்றும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X