2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மூதூரில் ஹெரோய்னுடன் இருவர் கைது

Editorial   / 2022 பெப்ரவரி 10 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஹைரியா நகர் பகுயில் வைத்து ஹெரோய்ன் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்களை, நேற்றிரவு (09) கைது செய்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது ஹெரோய்ன் போதைப்பொருளை விற்பனை செய்வதற்கு வைத்திருந்த மூதூர் - ஹைரியா நகரைச் சேர்ந்த 48 வயதுடைய நபரொருவரிடமிருந்து 100 மில்லிகிராம் ஹெரோய்னும்,  39 வயதுடைய மற்றுமொரு சந்தேகநபரிடமிருந்து 30 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள்  மீட்கப்பட்டதோடு, சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் ஹெரோய்ன் வைத்திருப்பதாக, மூதூர் சிறு குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பை மேற்கொண்டபோது, ஹெரோய்னுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மூதூர் நீதவான் நீதிமன்றில் இவர்களை ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை ஏற்பாடுகளை, மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X