2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

மூதூர் பிரதேச செயலாளரின் முக்கிய அறிவிப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 02 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், தீஷான் அஹமட் 

மூதூர் பிரதேச செயலகத்தில் தங்களது அலுவல்களை நிறைவேற்ற வருகின்ற பொதுமக்களுக்கு பிரதேச செயலாளர் எம்.முபாரக் விஷேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

அவரது அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

மூதூர் பிரதேச செயலகத்தில் தங்களது அலுவல்களை நிறைவேற்ற வருகின்ற பொதுமக்கள் தமது அரச சுற்று நிருபத்திற்கமைவாக பணம் செலுத்தி நிறைவேற்றப்பட வேண்டிய அலுவல்களுக்கு மாத்திரம் பணம் செலுத்தி அதற்கான பற்றுச்சீட்டுகளைப் உடன் பெற்றுக்கொள்ளுமாறும், மூதூர் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

காணி அனுமதிப்பத்திரங்கள், மண் அனுமதிப்பத்திரங்கள், வீடமைப்பு மற்றும் மலசலகூட செயற்திட்டங்கள், வாழ்வாதார உதவிகள், சமுர்த்தி முத்திரை  போன்ற பணிகளின் போது அரச சுற்றுநிருபத்திற்கு மாறாக முறைகேடான வகையில் எமது எந்த அரச ஊழியர்களாவது பணம் அறவிட்டால் (இலஞ்சம் கோரினால்) அதனை எழுத்து மூலமாக எனக்கு அறியத்தருமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.

மக்களுக்கு இலவசமாக செய்யப்படவேண்டிய சேவைகளுக்கு பணம் அறவிட்டு (இலஞ்சம் பெற்று) அவர்களின் கடமைகளை செய்ய முற்படுவோர் தொடர்பாக மக்கள் எழுத்து மூலமாக கொடுக்கப்படும் முறைப்பாடுகள் கவனத்திற்கொள்ளப்பட்டு, அவை தொடர்பில், விசாரணை மேற்கொள்ளப்பட்டு சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறியத்தருகின்றேன் என்றும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, பொதுமக்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்குமுறைப்பாடு செய்யலாம் எனவும் அவர், மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X