2025 மே 01, வியாழக்கிழமை

‘மூன்று மாதங்களில் 100 குளங்களின் புனரமைப்புப் பணிகளை நிறைவு செய்வேன்’

Editorial   / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், பொன் ஆனந்தம்

திருகோணமலை மாவட்டத்தில், மூன்று மாதங்களில் 100 குளங்களின் புனரமைப்புப் பணிகளை நிறைவு செய்வேன் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்தார்.

திருகோணமலை, மொரவெவ பிரதேசசபையின் தவிசாளரும், தெவனிபியவர ஸ்ரீ இந்திரா ராம விகாரையின் விகாராதிபதியான பொல்ஹேன்கொட உபரத்தின ஹிமியின் அழைப்பின் பேரில், புத்தர் சிலையொன்றை, நேற்று (31) மாலை திறந்து வைத்து, மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், திருகோணமலை மாவட்டத்தில் தற்போ 74 குளங்கள் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு விவசாயத்துறையை அடிப்படையாகக் கொள்ள வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

காலநிலை மாற்றங்கள் சவாலாக இருந்தபோதும் புதிய திட்டங்களின் மூலம் அந்தச் சவால்களை வெற்றி கொள்ள வேண்டுமெனனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.  

மேலும், அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் பேதங்களை மறந்து, நல்லிணக்கத்துடன் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைய வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .