அப்துல்சலாம் யாசீம் / 2019 மார்ச் 17 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - ஹொரவ்பொத்தான பிரதான வீதி, திரியாய் சந்தியில் வைத்து, மொரவெவ பிரதேச சபைத் தவிசாளரின் கார், இன்று (17) காலை 10.30 மணியளவில் விபத்துக்குள்ளானதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மஹதிவுல்வெவ பிரதேசத்திலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கார், வேகக் கட்டுப்பாட்டை இழந்து, கல்வெட்டு ஒன்றுடன் மோதியதில், இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் படுகாயங்களுக்குள்ளான சாரதியும் சிவில் பாதுகாப்புப் படை வீரருமான மஹதிவுல்வெவ - தெவனிபியவர பகுதியைச் சேர்ந்த ஐனஜீவ சம்பத் (29 வயது), திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகளை, மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
7 minute ago
21 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
21 minute ago
1 hours ago
1 hours ago