2025 மே 12, திங்கட்கிழமை

மோட்டார் சைக்கிளில் செல்ஃபி; இளைஞர்கள் படுகாயம்

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 15 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவர், மாடுடன் மோதி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்று (14) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் இளைஞர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளை செலுத்திக் கொண்டிருந்த வேளையில் கையடக்க தொலைபேசியில் செல்ஃபி எடுப்பதற்கு முற்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வீதியின் குறுக்கே வந்த மாடுடன் மோட்டார் சைக்கிள் மோதியதாகவும் இதனை அடுத்து இருவரும் படுகாயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

இவ்விபத்தில் வவுனியா- பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 30 வயது உடையவர்களே படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X