2025 மே 12, திங்கட்கிழமை

மோட்டார் சைக்கிள் திருட்டு ; ஒருவர் கைது

எப். முபாரக்   / 2017 டிசெம்பர் 10 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், மோட்டார் சைக்கிள் திருட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கந்தளாய் பொலிஸார் நேற்று(09) கைது செய்துள்ளனர்.

 

இந்தச் சம்பவத்தில் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபரொருவரையே பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது​

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த சந்தேகநபர் கந்தளாய் பகுதியில் காணாமல் போன மோட்டார் சைக்கிளுடன் தொடர்புடைய சந்தேகநபர் எனவும், இவர் நீண்டகாலமாக தலைமறைவாக இருந்த நிலையில், பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை தடுப்புக் காவலில் வைத்து, கந்தளாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X