Kogilavani / 2016 ஜனவரி 22 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.என்.எம்.புஹாரி
கடந்த கால போர்ச் சூழலின் போது மூதூர்-பட்டித்திடல் கிராமத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர்,யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோர் ஆகியோரின் குடும்பங்களுடனான சந்திப்பு மூதூர் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில், வியாழக்கிழமை(21) பட்டித்திடல் கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தில் இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றிய மூதூர் பிரஜைகள் குழுவின் தலைவர் சிவசிறி பாஸ்கரன் குருக்கல், 'கடந்தகால ஆட்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் எத்தனையோ ஆர்ப்பாட்டங்களை நடத்தியும் அவை பெரிதாக கவனத்தில்கொள்ளப்படவில்லை.
நல்லாட்சிக்காகவே மக்கள் தற்போதைய அரசாங்கததுக்கு வாக்களித்தனர். அதற்கு காரணம், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கைதான்.
ஆனால் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பொங்கல் தின விழாவில் பிரதமர் உரையாற்றும்போது, காணாமல் ஆக்கப்பட்டோர் பெயர்பட்டியலில் குறிப்பிடப்பட்டவர்கள் இறந்து விட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ள கருத்து வருத்தம் அளிக்கின்றது' என்றார்.
இக்கலந்துரையாடலில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சேர்ந்த 27 பேர் கலந்துகொண்டதோடு அவர்களின் 25 பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago