Niroshini / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை திரியாய் - கட்டுக்குளம் பகுதியில் காட்டு யானையொன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இரண்டு பேரை இன்று (14) பிற்பகல் கைது செய்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ஏ.பீ.கே.டி.ஜெயவர்த்தன தெரிவித்தார்.
கட்டுக்குளம் பகுதியில் காட்டு யானையொன்று இறந்து கிடப்பதாக குச்சவெளி பொலிஸ் நிலையத்துக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து பொலிஸார் வனஜீவராசிகள் தினைக்களத்துக்கு அறிவித்ததையடுத்து யானை இறப்பதற்குரிய காரணம் மின் சாரம் தாக்கப்பட்டமையே எனவும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்போது,யானைக்காக வைக்கப்பட்டிருந்த மின் கம்பியை கைப்பற்றிய வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் தந்தையையும் மகனையும் கைது செய்துள்ளனர்.
திரியாய் -கட்டுக்குளம் பகுதியில் வசித்து வரும் கந்தையா தியாகலிங்கம் (வயது 55) மற்றும் மகனான தியாகலிங்கம் ராசா (வயது 26) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago