2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

யானை தாக்கி மூவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 23 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ், வா.கிருஸ்ணா, ஏ.எஸ்.எம்.யாசீம்,ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில்  காட்டு யானைகளின் தாக்குதல்களுக்குள்ளாகி படுகாயமடைந்த 03 பேர் வைத்தியசாலைகளில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பனிச்சங்குளம் கிராமத்தில்  புதன்கிழமை காலை தந்தையும் அவரது 07 வயது மகளும் யானையின் தாக்குதலுக்குள்ளானதைத் தொடர்ந்து, கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா வான்எல புஹாரி வித்தியாலயத்தின் அபிவிருத்திச்சங்க செயலாளரான செய்னுலாப்தீன் நஜாத் (வயது 30) என்பவர் தனது மகள் ஹம்தியை பாடசாலைக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தபோதே இந்தச் சம்பவத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இவ்வாறிருக்க மட்டக்களப்பு, பலாச்சோலைக் கிராமத்தில்  செவ்வாய்க்கிழமை (22) மாலை அக்கிராமத்தைச்; சேர்ந்த க.அருளானந்தம் (வயது 35) என்பவர் யானையின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.

வயலில் நுழைந்த யானையை விரட்ட முனைந்தபோதே இவர் யானையின் தாக்குதலுக்குள்ளானார். இதனைத் தொடர்ந்து,

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .