Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
தீஷான் அஹமட் / 2017 நவம்பர் 16 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தோப்பூர், கூர்கண்டம் கிராமத்துக்குள் இன்று (16) அதிகாலை உட்புகுந்த காட்டு யானையொன்று, வீடொன்றின் பாதுகாப்பு வேலியை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளது.
இதேவேளை, குறித்த வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள், வேலியை யானை உடைக்கும் சத்தம் கேட்டவுடன் பாதுகாப்பான முறையில் தப்பியோடியுள்ளனர்.
இக்கிராமத்தில் கடந்த வாரமும் காட்டு யானைகள் உட்புகுந்து தென்னை, வாழை மரங்கள் உள்ளிட்ட பயிரினங்களை துவம்சம் செய்துள்ளன.
தமது கிராமத்துக்குள், இவ்வாறு காட்டு யானைகள் தொடர்ச்சியாக இரவு வேளையில் உட்புகுந்து சேதம் விளைவிப்பதால், ஒவ்வொரு இரவுப் பொழுதுகளையும் பீதியுடன் கழித்து வருவதாக, பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்
இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கிராம மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
12 May 2025
12 May 2025