Editorial / 2019 ஜூலை 24 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்,பொன்ஆனந்தம்
திருகோணமலை-திரியாய் பகுதியில் காட்டு யானை தாக்கி வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.
வீட்டில் உறங்கிக் கொண்டு வெளியில் வந்தபோது யானை வீட்டுக்கு முன்னால் தாக்கியதால் அவ்விடத்திலேயே ,திரியாய் - 05ம் வட்டாரத்தைச் சேர்ந்த நல்லையா வள்ளிப்பிள்ளை (78 வயது) உயிரிழந்துள்ளதாக தெரிவித்த பிரதேச மக்கள், சடலம் தற்பொழுது சம்பவம் இடம்பெற்ற இடத்தில் காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, யானையின் தாக்குதலில் காயமடைந்த அதே இடத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மயில் வாகனம் (46 வயதுடையவர்) வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக திரியாய் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இது குறித்து அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இன்னும் யானை மின்வேலி அமைப்பதில் தாமதம் நிலவுவதாகவும் பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
13 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
57 minute ago
1 hours ago