2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

யானை தாக்கியதில் ஒருவர் மரணம்

Editorial   / 2019 மார்ச் 06 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட், அப்துல்சலாம் யாசீம், பொன்ஆனந்தம்

திருகோணமலை - மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலியார் குளம் பகுதியில் வைத்து, யானை தாக்கிப் படுகாயமடைந்த நபரொருவர், நேற்று (05)​காலை உயிரிழந்துள்ளாரென, மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

க.சிறிகந்தராசா (வயது 74) என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நபர், சேனைப்பயிர்ச் செய்கை செய்து, அங்கு சிறிய குடிசை அமைத்துக் காவலில் இருந்த போதே, நேற்று அதிகாலை அவரை யானை தாக்கியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த நபரை, திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று அயலவர்கள் அனுமதித்தபோதும் சிகிச்சை பலனின்றி காலை 07 மணியளவில்  உயிரிழந்துள்ளார்.

சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில், மொறவெவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .