Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜனவரி 25 , பி.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
அபு அலா, எஸ்.எம்.முபீன்
திருகோணமலை - கம்பகொட்ட பகுதியில் நேற்று யானை தாக்கியதில் நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு படுகாயமடைந்தவர் திருகோணமலை, எத்தாபெந்திவெவ- பகுதியைச் சேர்ந்த சின்தக விமலசேன (42வயது) எனவும் தெரியவந்துள்ளது.
குறித்து சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வயல் காவலுக்கு சென்ற வேளையில் யானை வயலுக்குள் நின்ற வேளை யானையை விரட்ட முற்பட்டபோது யானை துரத்தி தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து படுகாயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. R
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago