2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

யானை தூக்கி எறிந்தவர் முதுகெலும்பு உடைந்து வைத்தியசாலையில்

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஒக்டோபர் 13 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, திம்பிரிவெவ  பகுதியில் காட்டு யானையொன்று,தனது வீட்டின் முன்னால் இருந்தவரை தூக்கி வீசியதில், அவரது, முதுகெலும்பு உடைந்த நிலையில் இன்று (13) அதிகாலை மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 குறித்த நபர், மஹதிவுல்வெவ, திம்பிரிவெவ பகுதியைச் சேர்ந்த டி.சிறிவர்தன  (வயது 49) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, தனது வீட்டுக்கு முன்னால் வந்த யானையை விரட்டி விட்டு, யானைக்கு வெடிபோட்டதாகவும்  கோபம் கொண்ட யானை அவரை தூக்கி வீசியதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, பிரதேசத்தில் தொடர்ந்தும் யானையின் தாக்குதலுக்கு பொதுமக்கள் உள்ளாவதாகவும் உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தும் அவர்கள், கண்மூடிதனமாக இருப்பதாகவும் பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .