Editorial / 2020 ஜூன் 11 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்
திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உப்பூறல் கிராமத்துக்குள், இன்று (11) அதிகாலை உட்புகுந்த காட்டுயானைகள், பயன் தரும் தென்னை மரங்களை துவம்சம் செய்துள்ளன.
இதன்போது சுமார் 30க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை, காட்டுயானைகள் சேதப்படுத்தியுள்ளன.
தமது கிராமத்துக்குள் காட்டு யானைகள் தொடர்ச்சியாக இவ்வாறு உட்புகுந்து பயன்தரும் மரங்களுக்கும் சேதம் விளைவிப்பதாகவும், தாம் வீடுகளில் அச்சத்துடன் உறங்க வேண்டிய நிலை காணபடுவதாகவும், உப்பூறல் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்டுள்ள தமக்கு, அரசாங்கம் நஷ்டஈடு வழங்க வேண்டுமெனவும், காட்டுயானைகள் கிராமத்துக்குள் உட்புகாத வகையில், யானை பாதுகாப்பு வேலி அமைத்து தருமாறு, உப்பூரல் கிராம மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
6 minute ago
22 minute ago
30 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
22 minute ago
30 minute ago
53 minute ago