2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

யானைகள் அட்டகாசம்; மீனவர் படுகாயம்; தென்னைகளுக்கும் சேதம்

Editorial   / 2019 ஜனவரி 13 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட் , அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, கந்தளாய் பகுதியில் மீனவர்  ஒருவரை, யானை தாக்கியதில், அவர் படுகாயமடைந்த நிலையில், கந்தளாய் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென, கந்தளாய் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (13) காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில், டபிள்யூ.எல்.ஆரியதாஷ (வயது 34) எனும் மீனவரே படுகாயமடைந்துள்ளார்.

குறித்த நபர், கந்தளாய் குளத்துக்கு மீன்பிடிக்கச் சென்ற வேளை குளத்துக்கு அருகாமையில் வைத்து யானை தாக்கியுள்ளது.

இதன்போது அவர் சத்தமிட்டதையடுத்து, ஏனைய மீனவர்கள் அவரைக் காப்பாற்றி, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் தாயிப் நகர் மீள்குடியேற்றக் கிராமத்துக்குள் இன்று அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள்  தென்னை மரங்களைச் சேதப்படுத்தியுள்ளன. இதனால் 40க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சேதமாகியுள்ளன.

இக்கிராம மக்கள் யுத்தத்தால் இடம்பெயர்ந்து, மீண்டும் 2009ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்டு, தென்னை மரங்களை நட்டுத் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், இவ்வாறு காட்டு யானைகள் தென்னைகளைத் துவம்சம் செய்வதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X