2025 மே 03, சனிக்கிழமை

யானையின் தாக்குதலில் சமுர்த்தி உத்தியோகத்தர் படுகாயம்

அப்துல்சலாம் யாசீம்   / 2019 மார்ச் 25 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை - மஹதிவுல்வெவப் பகுதியில், காட்டு யானையின் தாக்குதலால், சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று (24) அதிகாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மஹதிவுல்வெவ, சமகிபுரப் பகுதியைச் சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தரான கே.பீ.ஜெயசூரிய (43 வயது) என்பவரே, விலா எலும்பு முறிந்த நிலையில் படுகாயமடைந்துள்ளாரென, மேற்படி வைத்தியசாலைத் தகவல் தெரிவித்தது.

இதேவேளை, மொரவெவ பிரதேசத்தில் தற்போது காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து வருவதாக, வன விலங்குகள் பாதுகாப்புத் திணைக்களத்துக்குத் தெரியப்படுத்தியும் எதுவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லையென, பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X